விந்தணு தானம் அல்லது கரு முட்டை தானம் செய்த நபர், பிறக்கும் குழந்தை மீது எந்த ஒரு உரிமையும் கோர முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மும்பை பெண் ஒருவர், கருத்தரிப்பில் சிரமம் இருந்ததால், தங்கையிடம் இருந்து கரு முட்டைகளை தானம் பெற்று, வாடகை தாய் மூலம் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றதாகவும், பின்னர் கருத்து வேறுபாடால், கணவர் இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பிரிந்து சென்று கருமுட்டைகளை தானம் தந்த தங்கையுடன் சேர்ந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது.
இருவரும் குழந்தைகளுக்கு உரிமை கோரிக் கொண்டு குழந்தைகளை பார்க்க தன்னை அனுமதிப்பதில்லை என அப்பெண் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் வழிகாட்டுதலின்படி, விந்தணு அல்லது கருமுட்டை தானம் செய்தவரோ, அல்லது வாடகை தாயாரோ பிறக்கும் குழந்தை மீது எந்த ஒரு உரிமையும் கோர முடியாது என தெரிவித்தார்.